இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் மாயம்

இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் மாயமானது.
இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் மாயம்
Published on: 

விருதுநகர் முத்துராமன்பட்டி பகுதியில் வசிப்பவர் அன்பின்ராஜன் (வயது 75). இவர் இந்நகர் மதுரை ரோட்டில் உள்ள தேவாலயத்தில் போதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் இரு சக்கர வாகனத்தில் அந்த தேவாலயத்திற்கு சென்றார். தற்போது அறக்கட்டளையில் பணியாற்றி வரும் இவர் ரூ. 40 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து இருசக்கர வாகனத்தில் வைத்து பூட்டி விட்டு பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் இருந்த பணப்பை மாயமாகிவிட்டது. இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X