ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது

புதுச்சத்திரம் அருகே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது.
ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது
Published on

சென்னையை சேர்ந்தவர் சிவசண்முகம் (வயது 62). இவர் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு நகராட்சிகளில் ஆணையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சிவசண்முகம் அவரது மனைவி சாந்தியுடன், சென்னையில் இருந்து கரூருக்கு காரில் சென்றார். காரை சென்னையை சேர்ந்த டிரைவர் பொன்ராம் ஓட்டிச் சென்றார். புதுச்சத்திரம் அடுத்த சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தாத்தையங்கார்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது காரில் இருந்து கரும் புகை வெளியேறியது. இதையடுத்து சிவசண்முகம் உள்பட 3 பேரும் காரில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் கார் திடீரென தீப்பிடித்து முழுவதுமாக எரிந்தது. இந்த தீ விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com