கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

அரக்கோணம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
Published on

அரக்கோணம் தாலுகா போலீசார் நேற்று மாலை தணிகை போளூர், இச்சிபுத்தூர், ரெட்டை குளம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெட்டை குளம் செக் போஸ்ட் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரக்கோணம் அடுத்த பாலகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com