டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 போட்டி தேர்வுக்கு இன்று இலவச பயிற்சி வகுப்பு

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 போட்டி தேர்வுக்கு இன்று இலவச பயிற்சி வகுப்பு
Published on

முதன்மைத்தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 2/2ஏ (5,446) காலிப்பணியிடங்களுக்கு முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி முதன்மைத்தேர்வு நடத்தப்படுகிறது.

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இந்த போட்டித்தேர்வுக்கு இன்று (புதன்கிழமை) அறிமுக வகுப்பு தொடங்குகிறது. மேலும் பல மாதிரித்தேர்வுகள் நடத்தி, தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தனிநபர் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், தொகுதி 2/2ஏ தேர்வுக்கான பதிவு எண், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- 2, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் அலுவலகத்திற்கு நேரில் வரவும்.

இணையத்தில்...

மேலும் தொலைதூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் அலுவலகத்திற்கு நேரில் வர இயலாதவர்கள் அரசுப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி பெற்று பயனடையும் வகையில் கல்வி தொலைக்காட்சியின் மூலமாக பயிற்சி வகுப்புகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிப்பரப்பாகும். மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்திலும், TncareerServicesEmployment என்ற Youtube சேனலிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற போட்டித்தேர்வர்கள் கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அல்லது தொலைபேசி எண். 04324 -223555 மூலமாக தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com