மின்சாரம் பாய்ந்து பிளஸ்-2 மாணவர் பலி

கரூரில் மின்சாரம் பாய்ந்து பிளஸ்-2 மாணவர் பலியானார்.
மின்சாரம் பாய்ந்து பிளஸ்-2 மாணவர் பலி
Published on

பிளஸ்-2 மாணவர்

கரூர் காதப்பாறை பகுதிக்குட்பட்ட அருகம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 54). இவரது மகன் கவுஷிக் (17). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கவுஷிக், கண்ணா கார்டனில் உள்ள தனது வீட்டில் மின் விளக்கை போடுவதற்காக சுவிட்சை ஆன் செய்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட கவுஷிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி கிருஷ்ணா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவுஷிக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com