புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை: கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை: கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை: கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் தரிசனம்
Published on

தமிழ் மாதமான புரட்டாசியில் பெருமாளுக்கு பக்தர்கள் விரதம் கடைபிடித்து வழிபட்டு வருகின்றனர். இதில் சனிக்கிழமையான நேற்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவிலில் நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர்.

கோவிலில் பெருமாளின் உற்சவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com