ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

அகரகோட்டாலத்தில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
Published on

கள்ளக்குறிச்சி அருகே அகரகோட்டாலம் ஊராட்சியில் ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராணி, உதவி இயக்குனர் ரத்தினமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அப்பகுதியில் ரூ.1 கோடியே10 லட்சம் மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்ததோடு, ரூ.7 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்டு சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். பின்னர் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் அவர் திறந்து வைத்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com