கிரிப்டோ முதலீட்டில் ரூ.1 கோடி மோசடி: தனியார் டிரேடிங் நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் கைது

மாரியப்பன் மற்றும் மதுபாலா ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
Published on: 

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் சுமார் ரூ.1 கோடி மோசடி செய்ததாக, தனியார் டிரேடிங் நிறுவன மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மோசடி

இந்த நிலையில், அதே நிறுவனத்தில் பணியாற்றிய யுவஸ்ரீ என்ற பெண் ஊழியர், ஊழியர்களின் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், நிறுவன மேலாளர் மாரியப்பன் மற்றும் மதுபாலா ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை

மேலும், அவர்களிடம் இருந்து ஒரு மடிக்கணினி, 6 கணினிகள், 40 வங்கி பாஸ்புக்குகள் மற்றும் 20 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மோசடியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com