1 கிலோ வெறும் 2 ரூபாய்... வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

நெல்லையில், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
1 கிலோ வெறும் 2 ரூபாய்... வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி பகுதிகளில் விளையும் காய்கறிகளை, பணகுடி அருகே காவல்கிணறு சந்தைக்கு கெண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். கேரளாவில் ஓணம் பண்டிகை நிறைவு மற்றும் வரத்து அதிகரிப்பு காரணமாக காய்கறிகளின் விலை சரிந்துள்ளது.

15 முதல் 30 ரூபாய்க்கு விற்பனையான வெண்டைக்காய், வெள்ளரிக்காய், புடலங்காய் ஆகியவை தற்பேது கிலோவுக்கு 2 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அத்துடன், காய்கறிகள் கால்நடைகளுக்கு உணவாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com