நெல்லையில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது

நெல்லை மாநகரம் சந்திப்பு, குறுக்குத்துறை அருகில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

நெல்லையில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
Published on

நெல்லை,

நெல்லை மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறுக்குத்துறை அருகில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே வந்த சந்திப்பு பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 29) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 1 கிலோ 80 கிராம் கஞ்சாவை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து சந்திப்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்தை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com