திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது


திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 May 2025 11:35 AM IST (Updated: 30 May 2025 12:09 PM IST)
t-max-icont-min-icon

போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தெற்கு கள்ளிகுளம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த கள்ளிகுளம், இ.பி. ஆபீஸ் தெருவை சேர்ந்த பூதலிங்கம் (வயது 31) என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர், பூதலிங்கத்தை காவல் நிலையம் அழைத்து சென்றார். இதுகுறித்து வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பூதலிங்கத்தை நேற்று கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் போதை பழக்கத்தை குறைக்கும் நோக்கத்தோடு, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.

1 More update

Next Story