திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

திருநெல்வேலியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குப்பகுறிச்சி விலக்கு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த குப்பகுறிச்சி, தெற்கு தெருவை சேர்ந்த மகாராஜன் (வயது 25) என்பவரை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 50 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், மகாராஜனை சீவலப்பேரி காவல் நிலையம் அழைத்து சென்றார்.

இதுகுறித்து சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மகாராஜனை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com