ஓடும் ரெயிலில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஓடும் ரெயிலில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஓடும் ரெயிலில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

ஓடும் ரெயிலில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து பெங்களூரு வரை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரெயிலில் வேலூர் பறக்கும் படை தனி தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்பொழுது டி-1 கோச்சில் தலா 50 கிலோ அடங்கிய 14 ரேஷன் அரிசி மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசியும் டி-7 கோச்சில் 30 கிலோ அடங்கிய 10 மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசியும் என மொத்தம் 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை திருவலம் பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com