

சென்னை,
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்ட சபை தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த ஆண்டு தேர்வுகள் முன்கூட்டியே நடைபெறுமோ எனும் கேள்வி பொதுவாக இருந்த நிலையில், அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை வகுப்பு வாரியாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன. அதேபோல், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன.
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன.
16ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைந்து 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். அதன்பிறகு 2026 – 2027ஆம் கல்வியாண்டிற்கான முதல் வேலை நாள் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.