நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுவடைந்து இருக்கிறது. இதன் காரணமாகவும், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தமிழக பகுதிகளில் சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com