சேலம் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது

இருசக்கர வாகனத்தில் கடத்திய 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது
Published on

சேலம்,

சேலம் அருகே வீராணம், வலசையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக வீராணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வீராணம் போலீசார் மேட்டுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள், மேட்டுப்பட்டியை சேர்ந்த மயில்ராஜ் (வயது 25), கோபி (25) என்பதும், வெளியூரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வீராணம் பகுதியில் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 10 கிலோ கஞ்சா, மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com