10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

நெல்லை மாநகர பகுதியில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Published on

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மேஸ்திரிகள் பெருமாள், முத்தையா மற்றும் பணியாளர்கள் நேற்று நெல்லை பேட்டை பகுதிகளில் உள்ள பழக்கடை, ஜூஸ் கடை, பேக்கரி மற்றும் பலசரக்கு கடைகள், ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் மொத்தம் 45 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. 15 கடைகளுக்கு ரூ.6 ஆயிரத்து 600 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com