

சென்னை,
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சென்ற வேன் ஒன்று 13-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துகொள்வதுடன், மறைந்தோரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.