தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு கோரி 10 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு கோரி 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு கோரி 10 லட்சம் பேர் விண்ணப்பம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த மே மாதம் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் 26-ந் தேதி வரையிலும் தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 54 ஆயிரத்து 327 நபர்கள் புதிய ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின்படி, 6 லட்சத்து 65 ஆயிரத்து 102 புதிய ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. 63 ஆயிரத்து 601 ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com