கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கனமழை காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.4 லட்சம் தருவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிவர்புயல் (ம) கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் (அ) அதற்குமேல் வழங்க வேண்டும் என்று அதில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com