தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் - ரூ.115 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் - ரூ.115 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, திரூப்பூரில் ரூ. 26 கோடி மற்றும் ஓசூரில் ரூ. 30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திருப்பூர் மற்றும் ஓசூர் மாநகராட்சிகளில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படவுள்ளது. கூடலூர் (டி), அரியலூர், வடலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, கொளச்சல் மற்றும் பொள்ளாச்சி பேரூராட்சிகளுக்கு இதற்கான நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com