பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பாப்பாரப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கோவிந்தராஜ் (வயது 34), அப்பு (21), மதன் (30), அஜித் (25) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சுங்கச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பாபு (45), பாரூக் (37), சாதிக் (54), ஷாஜகான் (35), ரபீக் (53), முருகேஷ் (39) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com