கார் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்

சேர்ந்தமரம் அருகே கார் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்
Published on

சுரண்டை:

சங்கரன்கோவில் தாலுகா துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் அஜித் (வயது 26). சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த கனிசெல்வம் (38), அவரது மகன் நிதிஷ் (9), செல்வராஜ் (25), காளிராஜ் (24), தெற்கு புதூரை சேர்ந்த செல்வ முகுந்தன் (11), திருநீலகண்டன் (25), கோட்டியப்பன் (39) உள்ளிட்ட 10 பேரை ஏற்றிக் கொண்டு தீர்த்தம் எடுத்துக்கொண்டு அருகே தளவாய்புரம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தார்.

சேர்ந்தமரம் அருகே வீரசிகாமணியை அடுத்த ஒரு திருப்பத்தில் திரும்பும்போது, எதிர்பாராத விதமாக அருகில் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 10 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com