10 இடங்களில் வெயில் சதம்: அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி பதிவு

மதுரை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
10 இடங்களில் வெயில் சதம்: அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி பதிவு
Published on

தமிழ்நாட்டில் கடந்த 27-ந்தேதியில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும்   வெப்பம் சுட்டெரித்ததை பார்க்க முடிந்தது. அதன்படி, மதுரை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. அதன் விவரம் வருமாறு:-

மதுரை- 104 டிகிரி(40 செல்சியஸ்)

சேலம் - 103.64 டிகிரி (39.8 செல்சியஸ்)

வேலூர் - 103.46 டிகிரி (39.7 செல்சியஸ்)

ஈரோடு - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம்- 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)

தர்மபுரி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

கரூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

திருச்சி - 102.02 டிகிரி (38.9 செல்சியஸ்)

திருத்தணி - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

கோவை - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com