வீட்டில் 10½ பவுன் நகை மாயம்

வீட்டில் 10½ பவுன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டில் 10½ பவுன் நகை மாயம்
Published on

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை அருகே உள்ள சிவலிங்கபுரத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா மனைவி முத்தழகி (வயது 42). இவர் கடந்த 1-ந் தேதி கோவிலுக்கு சென்று விட்டு, நகைகளை கழட்டி வீட்டில் பீரோவில் வைத்து பூட்டி சாவியை அருகில் உள்ள அலமாரியில் வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பீரோவை திறந்து பார்த்தபோது 10 பவுன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவை மாயமாகி இருந்தது. இதுகுறித்து உடனடியாக ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com