அம்மன் சிலையில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலி திருட்டு

அம்மன் சிலையில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலி திருட்டு

சென்னை வியாசர்பாடியில் அம்மன் சிலையில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலியை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
Published on

சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனியில் உள்ள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் சிலையின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலியை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுபற்றி கோவில் நிர்வாகியான ராஜம்மாள் அளித்த புகாரின்பேரில் எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற விக்கி (வயது 23) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து அம்மன் சிலையில் இருந்து திருடிய 10 பவுன் தாலி சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com