மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

மேட்டூர் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீளம் 1,700 மீட்டர்களாகும். மொத்தம் 120 அடி நீர் தேக்க அளவு கொண்ட இந்த அணையில், அதிகபட்சம் 93.4 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் இந்த ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இதையடுத்து ஜூன் மாத பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை பரிசீலித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து ஜூன் 12-ந் தேதி (நேற்று) மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் இன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.33 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் நீர்வரத்து 764 கன அடியாக உள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணையில் தற்போது 60.18 டிஎம்சி நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com