

விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிரா மத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வீரமணி (வயது 24), கூலித்தொழிலாளி. இவர் 18 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 6.3.2023 அன்று அந்த சிறுமி, இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமியை பின்தொடர்ந்து சென்ற வீரமணி, திடீரென அச்சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அந்த சிறுமி, வீரமணியிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டுள்ளார். அதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்ததுடன் இதுபற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை யும், உனது தாயையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) வினோதா, குற்றம் சாட்டப்பட்ட வீரமணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை யும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண் டுமெனவும் உத்தரவிட்டார்.