தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
Published on

சாணார்பட்டியை அடுத்த வீரசின்னம்பட்டியை சேர்ந்தவர் சோனையன் (வயது 53). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 27.1.2015 அன்று மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனையனை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சோனையனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com