தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
Published on

வேடசந்தூர் அருகே உள்ள கருங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com