வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்
Published on

சென்னை:

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி (வயது 32). ஐ.டி. நிறுவன ஊழியர். இவருக்கும் லட்சுமி பிரசன்னா(26) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள், சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தனர்.

திருமணத்தின்போது குமாரசாமிக்கு 100 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 5 ஏக்கர் நிலம் ஆகியவை வரதட்சணையாக கெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை குமாரசாமி துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், மனைவியை வீட்டில் பூட்டி வைத்தும் சித்ரவதை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த லட்சுமி பிரசன்னா, 7.10.2013 அன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கெலை செய்து கெண்டார்.

இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள மகளிர் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஆரத்தி பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குமாரசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com