இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்

இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்தது.
இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மதுரவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 28). கடந்த 2017-ம் ஆண்டு இவர், கிண்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.

பின்னர், அந்த பெண் அணிந்திருந்த சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கிண்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிகுளம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஆரத்தி பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அறிவழகன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com