

அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே உள்ள ஆண்டித்தோப்பு சீதப்பால் பாலம் அருகே மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பூதப்பாண்டி சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் சாக்கு மூடையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனையிட்ட போது சாக்கு மூடயில் மதுபாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் வெள்ளமடம் வேம்பத்தூர் காலனியை சேர்ந்த வின்சென்ட் (வயது43), லாயம்விலக்கை சேர்ந்த மோகன் (75) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.