எருது விடும் விழாவில் 100 காளைகள் பங்கேற்பு

கீழ்அரசம்பட்டில் நடந்த எருது விடும் விழாவில் 100 காளைகள் பங்கேற்றன.
எருது விடும் விழாவில் 100 காளைகள் பங்கேற்பு
Published on

வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த கீழ் அரசம்பட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு சப்-கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். தாசில்தார் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் நதியாபுருஷோத்தமன், சிவாஜி, தர்மகர்த்தா குமரேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ஷீலா வரவேற்றார்.

இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் மற்றும் சாலையின் நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன. காலை 10 மணி அளவில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை தொடர்ந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறி பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர். மாடுகள் முட்டியதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் வருவாய் ஆய்வாளர் சந்தியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com