சென்னையில் காற்றின் தரத்தை அறிய 100 டிஜிட்டல் பலகைகள்

100 இடங்களில் காற்றின் தரத்தை அறிவிக்கும் டிஜிட்டல் பலகைகளை வைக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை,
சென்னையில் காற்றின் தரத்தை மக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள 100 இடங்களில் ரூ.6.36 கோடியில் டிஜிட்டல் பலகைகள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் மாநகராட்சி அலுவலகமாக ரிப்பன் மாளிகை கட்டிட நுழைவு வாயிலில் அமைக்கப்பட உள்ளது.
இதன்படி 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் பொருத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், காற்று தூசுகள், நச்சு வாயு விகிதம், காற்றின் வேகம், மழை அளவு, வெப்பநிலை உள்ளிட்ட 19 தரவுகள் அதில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி மாத இறுதிக்குள் இப்பணியை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story






