கோவையில் குடோனில் பதுக்கிய 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

கோவையில் போதை கும்பலை பிடிக்க சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டாலும் முற்றிலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
கோவையில் குடோனில் பதுக்கிய 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
Published on

கோவை,

கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதிகளில் தங்கி இருந்தும், தனியாக அறை எடுத்து தங்கியும் படித்து வருகிறார்கள்.

இந்த கல்லூரி மாணவர்களையும் மற்றும் வாலிபர்களையும் குறிவைத்து சிலர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருளை சப்ளை செய்து வருகிறார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது. கோவையில் போதை கும்பலை பிடிக்க சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டாலும் முற்றிலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்பேரில், கோவை தெற்கு பகுதி துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கோவை குனியமுத்தூர்-இடையர்பா ளையம் சாலையில் உள்ள கறிவேப்பிலை தோட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய கார் உதிரிபாகங்கள் குடோன் உள் ளது. இங்கு சட்டவிரோத பொருட்கள் பதுக்கப் பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து, போலீசார் அந்த குடோனில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் அங்குள்ள அறையில் சுமார் 100 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இவற்றை கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதைதொடர்ந்து போலீசார் தீவிர தேடும் வேட்டை நடத்தி கஞ்சா பதுக்கல் தொடர்பாக கேரள மாநிலம் ஆலுவாய் பகுதியைச் சேர்ந்த நவ்பல் (வயது 53), கோவை உக்கடத்தை சேர்ந்த அப்பாஸ் (37), வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த பென்னி ஜேக்கப் (36), போத்தனூர் மேட்டுதோட்டத்தை சேர்ந்த ரூபன் மார்ஷல் (29) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அத்துடன் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். 100 கிலோ கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்தனர் என்பது குறித்து கைதான 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com