

சென்னை,
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசு சார்பில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு 2 வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை அங்கு சிகிச்சை பெற்ற 100 கொரோனா நோயாளிகள் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவ்வாறு குணமடைந்தவர்களுக்கு மருத்துவ பெட்டகத்தை சிகிச்சை மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாய் சதீஷ் இன்று வழங்கினார்.