தமிழ்ப்புத்தாண்டையொட்டி கோவையில் இருந்து 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

விடுமுறை நாளில் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழ்ப்புத்தாண்டையொட்டி  கோவையில் இருந்து 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

கோவை

தமிழ்ப்புத்தாண்டு தினமான வருகிற 14-ந்தேதி செவ்வாய்க்கிழமை, விடுமுறை நாள் என்பதால் , கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி,தேனி, நாகர்கோவில் உள்பட பல பகுதிகளுக்கு கோவையில் இருந்து இந்த பஸ்கள் 10-ந்தேதி இரவு முதல் இயக்கப்படுவதாகவும், விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு வசதியாகவும் பஸ்கள் இயக்கப்பட இருப்பதாகவும் அரசு பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com