1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
Published on

சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாங்கூர் ஊராட்சி வரதராஜபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. வாங்கூர் ஊராட்சி தலைவர் அம்சவேணி பெரியசாமி தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் மாநில துணைச்செயலாளர் வினோத்காந்தி, கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் வெங்கடேசன், மாவட்டக்குழு துணைத்தலைவர் எஸ்.எம்.நாகராஜூ, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வஜ்ரம், கிராம வளர்ச்சி அலுவலர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் வளர்மதி, திட்ட இயக்குனர் லோகநாயகி ஆகியோர் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் 100 நாள் பணி தொழிலாளர்களை கொண்டு ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

மாவட்ட துணை செயலாளர் மஸ்தான், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், டி.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தலங்கை மாரிமுத்து, வாங்கூர் முருகன், வரதராஜபுரம் வேலு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரியா வினோத், ஊராட்சி மன்ற உறுப்பினர் அழகரசன், சின்னபொண்ணு, நவீன் குமார், அமுலுதேவ், இளைஞரணி அமைப்பாளர் மதிவாணன், காடிகுப்பம் துணைத்தலைவர் கனகராஜ், தீபன், மேகநாதன், லோகநாதன் பாஸ்கர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஆர்.காந்தியிடம், வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி வாங்கூர் ஊராட்சியில் உள்ள இடையதாங்கல் கிராமத்தில் உள்ள 4 தெருக்கள் வெவ்வேறு ஊராட்சியில் வருகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த 4 தெருக்களையும் எடையந்தாங்கல் ஊராட்சியாக மாற்ற வேண்டும். வாங்கூர் ஊராட்சியில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை கண்டு, அந்தப் பகுதிகளில் மரக்கன்றுகளை நடவேண்டும். வாங்கூர் ஊராட்சிக்கு அதிகளவு நிதி ஒதுக்கி நலப்பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com