கேரளத்துக்கு காரில் கடத்திய 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

போலீசார் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற நிலையில், காரை ஓட்டி வந்தவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினார்.
கேரளத்துக்கு காரில் கடத்திய 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
Published on: 

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியில், சொகுசு காரில் கேரளத்துக்குக் கடத்த முயன்ற 1,000 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் துரத்திப் பிடித்தனர்

ஈத்தாமொழி மருத்துவமனை சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ்பாபு தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த சொகுசு காரை நிறுத்த போலீசார் சைகை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்றார். இதையடுத்து போலீசார் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று காரை மடக்கிப் பிடித்தனர்.

1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஆனால், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடினார். காரைச் சோதனையிட்டபோது அதில் சுமார் 1,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்து, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தப்பியோடிய டிரைவருக்குப் போலீசார் வலை

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், தப்பியோடிய டிரைவர் யார் என்றும், கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com