வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

மீஞ்சூர் அடுத்த வல்லூரில் தேசிய அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 3 யூனிட்டில் தலா 500 வீதம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் முதல் யூனிட்டில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று 3-வது யூனிட்டில் ஏற்பட்ட பாதிப்பால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரு யூனிட்டுகளில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com