உலக முட்டை தினத்தை முன்னிட்டு 10,000 வேக வைத்த முட்டைகள் இலவசமாக விநியோகம்

பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் எனப் பலரும் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு முட்டைகளை பெற்று சென்றனர்.
உலக முட்டை தினத்தை முன்னிட்டு 10,000 வேக வைத்த முட்டைகள் இலவசமாக விநியோகம்
முட்டை
Published on: 

நாமக்கல்,

உலக முட்டை தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு 10,000 வேக வைத்த முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இலவச முட்டை விநியோகம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (வெள்ளிக்கிழமை) அன்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சங்கத் தலைவர் சிங்கராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு வேக வைத்த முட்டைகளை வழங்கி விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு -கோரிக்கைகள்

இந்த விழாவில் பொதுமக்களுக்கு 10,000 வேக வைத்த முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மனித உடலுக்குத் தேவையான புரதச்சத்துக்கள் முட்டையில் அதிகளவில் உள்ளதைக் குறித்தும், தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்திகள் துண்டு காகிதங்கள் மூலம் வழங்கப்பட்டன.

முட்டை உற்பத்தி குறித்து பேசிய பண்ணையாளர்கள், சமீபகாலமாக கோழித்தீவன மூலப்பொருட்களான மக்காச்சோளம் மற்றும் சோயா புண்ணாக்கு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கோழிப்பண்ணைத் தொழில் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருவதாக கவலை தெரிவித்தனர். பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் எனப் பலரும் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு முட்டைகளை பெற்று சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com