கன்னியாகுமரியில் ஒரே நாளில் 10,000 சுற்றுலா பயணிகள் படகுப் பயணம்!

தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் இப்பகுதிகளுக்கு படகுப் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரியில் ஒரே நாளில் 10,000 சுற்றுலா பயணிகள் படகுப் பயணம்!
படகுப் பயணம்
Published on: 

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 10,000 சுற்றுலா பயணிகள் படகுப் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

சுற்றுலாத் தலங்களின் ஈர்ப்பு

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயரத் திருவள்ளுவர் சிலை மற்றும் அவற்றை இணைக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலம் ஆகியவற்றைக் காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

விடுமுறை தினக் கூட்டம்

தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் இப்பகுதிகளுக்கு படகுப் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று தீபாவளி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால், காலை முதலே கன்னியாகுமரி கடற்கரை மற்றும் படகுத் தளத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

10,000 பேர் பயணம்

பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தொடர்ந்து படகுகள் இயக்கப்பட்டன. இதன் மூலம், நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 10,000 சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தைக் கண்டு ரசித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X