கோவில்பட்டியில் 1008 கஞ்சி கலய ஊர்வலம்

கோவில்பட்டியில் 1008 கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.
கோவில்பட்டியில் 1008 கஞ்சி கலய ஊர்வலம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா நேற்று நடைபெற்றது.

இதனை யொட்டி அதிகாலையில் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மகளிர் 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். மன்ற தலைவர் அப்பாசாமி விழாவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து உலக சமாதானம் வேண்டியும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் நோய் நீங்கி, அனைத்து மக்களும் நலமுடன் வாழவும், மாணவர் களின் கல்வி திறன் மேம்படவும், வேண்டி 1008 கஞ்சிக்கலயம், 31 அக்கினிசட்டி, 81 முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

மகளிர் அணி தலைவி பத்மாவதி முன்னிலையில் மாவட்டத் தலைவர் சக்தி முருகன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் மந்தித்தோப்பு ரோடு, மாதாங்கோவில் தெரு, தெற்கு பஜார், செண்பகவல்லி அம்மன் கோவில் வழியாக மன்றத்தை வந்த டைந்தது. பக்தர்கள் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதனையடுத்து ஆதிபராசக்தி அம்மன் சிலைக்கு, பக்தர்கள் பாலாபிஷேக நிகழ்ச்சியை வேள்விக்குழு தலைவர் கிருஷ்ண நீலா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com