கோவில்களில் 1008 சங்காபிஷேகம்

கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தை யொட்டி நேற்று மாலை 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி பூஜை நடைபெற்று பரசுராமன்பட்டர், ஏடகநாதர் சாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீரால் மகாஅபிஷேகம் செய்தார்
கோவில்களில் 1008 சங்காபிஷேகம்
Published on

சோழவந்தான், 

சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார்குழலிஅம்மன் சமேத ஏடகநாதர்சாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்க கோவில் ஒன்றாகும். இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் ஏடுஎதிரேரும் விழா உட்பட பல்வேறு விழாக்கள் சிறப்பாக நடைபெறும். விழாக்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தை யொட்டி நேற்று மாலை 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி பூஜை நடைபெற்று பரசுராமன்பட்டர், ஏடகநாதர் சாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீரால் மகாஅபிஷேகம் செய்தார். தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பரம்பரைஅறங்காவலர் சேவுகன்செட்டியார், செயல்அலுவலர் சரவணன் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சோழவந்தான் பிரளையநாத சுவாமி கோவில், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவில், மண்ணாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உட்பட சிவாலயங்களில் சோமவார சங்காபிஷேகவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருவாதவூர் திருமறை நாதர் கோவிலில், இன்மையிலும் நன்மை தருவார் கோவிலில், தெற்கு மாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக சங்குகளை அடுக்கி வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com