

சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 1 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த மாதத்தில் (மார்ச்) 1.01 கோடி பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத் தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1,01,97,604 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக 13.03.2026 அன்று 3,90,306 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2026, மார்ச் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 52,90,363 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 33,339 பயணிகள், கியுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 48,73,902 பயணிகள் (Single journey Paper QR /Token 19,19,053; Online QR – 1,33,469; Static QR 2,16,210; Whatsapp - 4,72,773; Paytm 3,35,352; ONDC – 12,71,008; PhonePe – 2,41,012; CMRL Mobile App 71,123; Chennai One App – 2,00,717, Event QR – 13185 ) மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, கியுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20 சதவீத கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.