இந்தி தேர்வை 1,020 பேர் எழுதினர்

திண்டுக்கல்லில் இந்தி தேர்வை 1,020 மாணவ-மாணவிகள் எழுதினர்.
இந்தி தேர்வை 1,020 பேர் எழுதினர்
Published on

திருச்சியில் உள்ள தக் ஷின பாரத் இந்தி பிரசார சபா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்டு மாதங்களில் இந்தி தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் இந்தி தேர்வு தொடங்கியது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 1,020 பேர் இந்தி தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.

அங்கு பிராத்மிக், மத்வமா, ராஷ்ரபாஷா ஆகிய பாடங்களுக்கு காலை 10 மணிக்கு முதல் தாள் தேர்வும், மதியம் 2 மணிக்கு 2-ம் தாள் தேர்வும் நடைபெற்றது. இதில் 1,020 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com