2023-24 முதல் அரையாண்டில் ரூ.1,027 கோடி வரி வசூல் - சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல்

2023-24 நிதி ஆண்டுக்கான முதல் அரையாண்டில் ரூ.1,027 கோடி வரி வசூலாகி இருப்பதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2023-24 முதல் அரையாண்டில் ரூ.1,027 கோடி வரி வசூல் - சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல்
Published on

சென்னை,

சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளுக்கு உட்பட்ட இடங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட சொத்து வரி, தொழில் வரி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 2023-24 நிதி ஆண்டுக்கான முதல் அரையாண்டில் ரூ.1,027 கோடி வரி வசூலாகி இருப்பதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் சொத்து வரி ரூ.770 கோடியும், தொழில் வரி ரூ.257 கோடியும் வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி மற்றும் தொழில் வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்கள் விரைந்து வரியை செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கால அவகாசம் முடிந்தும் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்களுக்கு 2% அபராதம் விதிக்கப்படும் என்றும், நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் சீல் வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com