சாய்பாபா கோவிலில் 105-வது மகாசமாதி விழா

சாய்பாபா கோவிலில் 105-வது மகாசமாதி விழா நடைபெற்றது.
சாய்பாபா கோவிலில் 105-வது மகாசமாதி விழா
Published on

குளித்தலை தாலுகா, பொய்யாமணி கிராமத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் 105-வது மகாசமாதி பெருவிழா ஆன்மிக சேவை செம்மல் சவுமியா அபிஷேக் ராஜுவின் ஆன்மிக சொற்பொழிவுடன் தொடங்கியது. மறுநாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.மாலையில் கலைமாமணி வீரமணி ராஜு, ஸ்ரீ அபிஷேக் ராஜு இசையமைத்து பாடிய, தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சாய்பாபாவின் 4 ஆரத்திகளின் குறுந்தகடை கோவில் டிரஸ்டி ஸ்ரீ கிருஷ்ணகுமார் வெளியிட்டார். வீரமணி ராஜு குழுவினரின் பக்தி பாடல்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com