10.7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: முதியவர் கைது

நெல்லை மாநகரம், ஸ்ரீனிவாசநகர் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெகடர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர்.
10.7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: முதியவர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீனிவாசநகர் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெகடர் வள்ளியம்மாள் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வி.எம்.சத்திரம், சரண்யாநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமச்சந்திரன் (வயது 63) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவரிடம் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட 10. கிலோ 725 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com